என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பகவதி அம்மன் கோவில்"
- கிணறு கடற்கரையில் இருந்து 50 அடி தூரத்தில் உள்ள போதும் உப்பு நீராக இல்லாமல் நல்ல குடிநீராக அமைந்து உள்ளது.
- நைவேத்தியம் தயாரிக்க தீர்த்த கிணற்றில் இருந்து தான் தண்ணீர் மடப்பள்ளிக்கு எடுத்து கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மிகவும் பழமையான கோவில் ஆகும். இந்த கோவிலின் உள் பிரகாரத்தில் வடக்கு பக்கம் மிகவும் பழமையான புனிதமான தீர்த்த கிணறு உள்ளது. இந்த கிணறு கடற்கரையில் இருந்து 50 அடி தூரத்தில் உள்ள போதும் உப்பு நீராக இல்லாமல் நல்ல குடிநீராக அமைந்து உள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த தீர்த்த கிணற்றில் இருந்துதான் தினமும் அம்மனுக்கு அபிஷேகத்துக்குரிய புனித நீரை கோவில் மேல் சாந்தி அல்லது கீழ் சாந்தி குடத்தில் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். கோவில் மூலஸ்தானத்துக்கு முன்பு உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் இருந்து பூமிக்கு அடியில் உள்ள சுரங்கப்பாதை வழியாகத் தான் கோவில் மேல் சாந்திகள் இந்த தீர்த்த கிணற்றுக்குள் சென்று அபிஷேகத்துக்குரிய புனித நீர் எடுத்து வருவதற்கான வழி உள்ளது.
மின்விளக்கு வசதி இல்லாத இருள் சூழ்ந்து கிடக்கும் இந்த சுரங்கப் பாதை வழியாகத்தான் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு நடக்கும் அபிஷேகத்துக்குரிய புனித நீரை கிணற்றில் இருந்து குடத்தில் மேல்சாந்திகள் எடுத்து வருவார்கள். மேலும் அம்மனுக்கு பூஜைக்கு பயன்படுத்துவதற்குரிய புனித நீரும் இந்த தீர்த்த கிணற்றில் இருந்து தான் எடுக்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி அம்மனுக்கு தினமும் காலையில் நைவேத்தியத்திற்காக படைக்கப்படும் வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், அரவணை பாயாசம், பால் பாயாசம், பொங்கல் போன்றவைகளை தயாரிப்பதற்காகவும் இந்த தீர்த்த கிணற்றில் இருந்து தான் தண்ணீர் மடப்பள்ளிக்கு எடுத்து கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
அதேபோல இரவு அம்மனுக்கு நைவேத்தியத்திற்காக படைக்கப்படும் அப்பம், வடை போன்ற பதார்த்தங்கள் தயாரிப்பதற்கும் இந்த தீர்த்த கிணற்றில் இருந்து தான் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி வெளியூர்களில் உள்ள கோவில்களில் நடக்கும் கும்பாபிஷேகம், வருஷாபிஷேகம், திருவிழா, கொடை விழா மற்றும் சுப காரிய நிகழ்ச்சிகளுக்கு இந்த தீர்த்த கிணற்றில் இருந்துதான் குடங்களில் புனித நீர் எடுத்து பகவதி அம்மனின் காலடியில் வைத்து பூஜை செய்து கொண்டு செல்வது வழக்கம்.
இந்த தீர்த்த கிணறு குப்பை கூழங்கள் விழுந்து மாசுபட்டு விடக்கூடாது என்பதற்காக கிணற்றின் மேல் பகுதியில் இரும்பு கம்பி வலைகளால் மூடப்பட்டு உள்ளது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த தீர்த்த கிணற்றில் கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்கள் பணம், காசு மற்றும் தங்கம், வெள்ளி போன்றவைகளை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக காசி, ராமேசுவரம் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வரும் வடமாநில பக்தர்கள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மற்றும் பகவதி அம்மன் கோவிலில் உள்ள தீர்த்த கிணற்றில் அதிக அளவில் பணம் காசுகளை காணிக்கையாக கொண்டு வந்து கொட்டி வணங்கி செல்கிறார்கள்.
பக்தர்கள் காணிக்கையாக போடும் பணம் மற்றும் காசுகள் இந்த தீர்க்கக் கிணற்றின் மேலே உள்ள கருங்கற்களால் ஆன தளத்தில் குவிந்து கிடக்கின்றன. இந்தத் தீர்த்த கிணற்றில் பக்தர்கள் காணிக்கையாக போடும் பணம், காசுகள் இந்த கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டு 3 ஆயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் இதுவரை கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டு எண்ணப்படவில்லை.
இந்த நிலையில் கோவிலில் ஆய்வு செய்ய வந்த கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் இந்த தீர்த்த கிணற்றை பார்வையிட்டார். அப்போது தீர்த்த கிணற்றில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், காசுகளை எண்ண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிணற்றை சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த தீர்த்த கிணற்றுக்கு செல்லும் சுரங்க பாதையில் மின்விளக்கு வசதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த தீர்த்த கிணற்றில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், காசுகள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் திறந்து எண்ண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தபின் விவேகானந்தர் மண்டபம் சென்றார்.
- ஜூன் 1-ந்தேதி (சனிக்கிழமை) மாலை வரை அவர் தியானம் மேற்கொள்வார்.
மக்களவை தேர்தலின் சூறாவளி பிரசாரத்தை முடித்த பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய முடிவு செய்தார்.
இன்று தேர்தல் பிரசாரத்தை முடித்த அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்தார். கன்னியாகுமரி வந்தடைந்த அவர், பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் சென்றார். பின்னர் தனது தியானத்தை தொடங்கினார். இன்று தியானத்தை தொடங்கிய அவர் ஜூன் 1-ந்தேதி மாலை தியானத்தை நிறைவு செய்கிறார்.
ஜூன் 1-ந்தேதி கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும்போது, மோடி தியானம் செய்வது தேர்தல் நடத்தை விதியை மீறுவதாகும். இதனால் தியானத்தை தடைவிதிக்க வேண்டும் என திமுக, காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்தார்.
- இன்று முதல் ஜூன் 1-ந்தேதி வரை மாலை வரை தியானம் செய்கிறார்.
இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான ஒட்டுமொத்த தேர்தல் பிரசாரம் இன்று மாலை ஆறு மணியுடன் ஓய்வடைந்தது.
பிராசரம் ஓய்ந்த நிலையில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் இருப்பதற்காக பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வந்தார்.
கன்னியாகுமரி வந்த அவர் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்று தியானத்தில் ஈடுபட்டார். ஜூன் 1-ந்தேதி மதியம் வரை இவர் தியானத்தில் ஈடுபடுகிறார்.
பிரதமர் வருகையொட்டி கன்னியாகுமரில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய இருக்கிறார்.
- விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடுவது தேர்தல் விதிமீறல்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை (வியாழக்கிழமை) மாலை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைந்து உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கும் அவர் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதன் பிறகு அவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுகிறார்.
பிரதமர் மோடி மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
மோடியின் கன்னியாகுமரி நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலரிடம் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், "தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளபோது விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடுவது தேர்தல் விதிமீறல் எனவும் பிரதமரின் இந்நிகழ்ச்சியினால் உலகம் முழுவதும் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்படுவர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் மோடி நாளை மாலை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கன்னியாகுமரி வருகிறார்.
- பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் இன்று காலை கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி:
பிரதமர் நரேந்திர மோடி நாளை (வியாழக்கிழமை) மாலை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைந்து உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கும் அவர் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதன் பிறகு அவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வருவதையொட்டி பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. காளீஸ்வரி, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமார், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் உள்பட பலர் சென்று இருந்தனர்.
- தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தோட்டம் பாட்டு வழங்கும் நிகழச்சி நடத்தப்படுகிறது.
- லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொங்கல் வைக்கும் வழிபாடு 25-ந்தேதி நடைபெற உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் பொங்காலை திருவிழா உலகப்பிரசித்தி பெற்றதாகும். ஒரே இடத்தில் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு பொங்கலிட்டு வழிபடுவார்கள். இந்த விழாவில் பங்கேற்க உலகின் பல பகுதிகளில் இருந்தும் பெண்கள் வருவதுண்டு. சிறப்பு வாய்ந்த இந்த பொங்காலை விழா கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் பொங்கால் திருவிழா இந்த ஆண்டு நாளை (17-ந்தேதி) தொடங்குகிறது. காலை 8 மணிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தோட்டம் பாட்டு வழங்கும் நிகழச்சி நடத்தப்படுகிறது.
லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொங்கல் வைக்கும் வழிபாடு 25-ந்தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 10.30 மணியளவில் கோவிலில் உள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டப்படும். மதியம் 2 மணிக்கு கோவிலின் முன்பு பல கிலோ மீட்டர் சுற்றளவில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட தொடங்குவார்கள்.
இரவு 7.30 மணிக்கு குத்தியோட்ட சிறுவர்களுக்கு சூரல் குத்து, இரவு 11 மணிக்கு மணக்காடு சாஸ்தா கோவிலுக்கு சாமி ஊர்வலம் கொண்டு செல்லப்படுகிறது. மறுநாள் (26-ந்தேதி) காலை 8 மணிக்கு அம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்படுவார். அன்று இரவு காப்பு அகற்றப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவில் திரளானோர் பங்கேற்பார்கள் என்பதால், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
- பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் ரூ. 2 கோடியே 32 லட்சம் வாடகை பாக்கி செலுத்தாமல் பாக்கி வைத்து இருந்தது.
- இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பல தடவை நோட்டீசு அனுப்பியும் எந்தவித பலனும் இல்லாமல் இருந்தது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 12 ஆயிரத்து 431 சதுர அடி காலிமனையில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நடத்தி வரும் தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு 1984-ம் ஆண்டில் இருந்து வாடகைக்கு வழங்கப்பட்டது.
இந்த வகையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி வரை 34 ஆண்டு காலத்துக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் ரூ. 2 கோடியே 32 லட்சம் வாடகை பாக்கி செலுத்தாமல் பாக்கி வைத்து இருந்தது. இந்த வாடகை பாக்கி வசூலிக்க குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பல தடவை நோட்டீசு அனுப்பியும் எந்தவித பலனும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் இந்த வாடகை பாக்கியை வட்டியுடன் வசூலிக்கு உத்தரவிட வேண்டும் என்று திருத்தொண்டர் சபை ராதாகிருஷ்ணன் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துஇருந்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி புகழேந்தி, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திடம் இருந்து வாடகை பாக்கியை வசூலிக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்.
இதற்கிடையில் அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் காரணமாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கியில் ஒரு தவணையாக முதல் கட்டமாக ரூ.84 லட்சத்து 70 ஆயிரத்து 46-க்கு காசோலையை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
- விடுமுறை நாளில் சுற்றுலா பயணிகளும் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடி
- கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கன்னியாகுமரி :
சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து குவிந்தனர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு அவர்கள் முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியல் போட்டனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகனந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.
மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
- ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறும்.
- அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 24-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளில் காலை 7.45 மணிக்கு அம்பாள் கொலு மண்டபத்துக்கு எழுந்தருள், 8 மணிக்கு பஜனை, மாலை 5 மணிக்கு மங்கள இசை, 6 மணிக்கு ஆன்மிக உரை, இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளிக் கலைமான் வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதல் போன்றவை நடக்கிறது.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனை, இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் பவனி வருதல் போன்றவை நடைபெறும்.
விழாவின் இறுதி நாளான 24-ந் தேதி காலை 10.30 மணிக்கு அலங்கார மண்டபத்தில் அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 1 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் மகாதானபுரம் நோக்கி பரிவேட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லுதல் நடக்கிறது. தொடர்ந்து அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் மகாதானபுரம், பஞ்சலிங்கபுரம் ஆகிய கிராமங்களில் அம்மன் வீதி உலா வருதல், தொடர்ந்து அம்மன் வெள்ளிபல்லக்கில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு வருதல், நள்ளிரவில் முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு, பின்னர் ஆண்டுக்கு 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கத்தினர் செய்து வருகிறார்கள்.
- பன்னீர் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்து நிரப்பி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
- காலை 10 மணிக்கு உதயாஸ்தமன பூஜை மற்றும் அதிவாசஹோமம் நடக்கிறது.
கன்னியாகுமரி :
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இந்த மாதத்தில் 12 நாட்கள் களப பூஜை நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான ஆடி களப பூஜை இன்று (திங்கட்கிழமை) காலை தொடங்கியது. இதையொட்டி காலை 10 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் கோவிலுக்கு வழங்கிய தங்க குடத்தில் சந்தனம், களபம், ஜவ்வாது, பச்சைக்கற்பூரம், அக்கி, இக்கி, புனுகு, பன்னீர் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்து நிரப்பி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
மாத்தூர் மட தந்திரி சங்கரநாராயணரூ பூஜை யை நடத்தினார். பின்னர் அம்மனுக்கு எண்ணை, பால், பன்னீர், இளநீர், தேன், தயிர், களபம், சந்த னம், குங்குமம், பஞ்சா மிர்தம் போன்றவற்றால் அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு மேளதாளம் மற்றும் பஞ்சவாத்தியங்கள் முழங்க களபம் நிரப்பப் பட்ட தங்க குடத்தை கோவில் மேல்சாந்திகள் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மன் எழுந்தருளி யிருக்கும் கருவறைக்குள் கொண்டு சென்றார்கள். அங்கு தங்க குடத்தில் நிரப்பப்பட்ட களபத்தினால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இந்த களப அபிஷேகத்தை கோவில் மேல்சாந்திகள் நடத்தினார்கள் . பின்னர் அம்மனுக்கு வைர கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணி விக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. 11-30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திருவாவடு துறை ஆதினம் திருக்கயிலாய பரம்பரை 24-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலமான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருவாடுதுறை ஆதின நெல்லை மண்டல மேலாளர் ராமச்சந்திரன், சுசீந்திரம் கிளைமட பொறுப்பாளர் நாதன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாளை முதல் 11-ந் தேதி வரை௧ 2 நாட்கள் தொடர்ந்து காலை 10 மணிக்கு அம்ம னுக்கு களப அபிஷேகம் நடக்கிறது. களப பூஜை நிறைவடைந்த பிறகு 12-ந்தேதி காலை 10 மணிக்கு உதயாஸ்தமன பூஜை மற்றும் அதிவாசஹோமம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், குமரி மாவட்ட கோவில்களில் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து உள்ளனர்
- கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் வரவேற்றார்.
- டியூரப்பாவின் மகள் பகவதி அம்மன் கோவிலில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்
கன்னியாகுமரி :
கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகள் பத்மாவதி தனது கணவர் விருபாட்சாவுடன் நேற்று இரவு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்தார். அங்கு வந்த அவரை நாகர்கோவில் தேவசம்தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் வரவேற்றார்.
பின்னர் எடியூரப்பாவின் மகள் பகவதி அம்மன் கோவிலில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். கோவிலில் உள்ள ஸ்ரீ காலபைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, மூலஸ்தான கருவறையில் அமைந்து உள்ள பகவதி அம்மன் சன்னதி, தியாக சவுந்தரி அம்மன் சன்னதி, இந்திரகாந்த விநாயகர் சன்னதி, பால சவுந்தரி அம்மன் சன்னதி, ஸ்ரீ தர்ம சாஸ்தா அய்யப்பன் சன்னதி, ஸ்ரீ நாகராஜர் ஸ்ரீ சூரிய பகவான் ஆகிய சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
- அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தகவல்
- கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருக்கும் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை
கன்னியாகுமரி :
குமரி மாவட்ட அறங்கா வலர் குழு தலைவராக பிரபா ராமகிருஷ்ணன் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்தார். அவர் பகவதி அம்மன் சன்னதியில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அதன்பிறகு கோவிலை ஆய்வு செய்த அவர், கோவிலில் நடைபெறும் அன்னதான திட்டம் எப்படி நடைபெறுகிறது என்று நேரில் பார்வையிட்டார். அன்னதான திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகளை சாப்பிட்டு ருசித்துப் பார்த்தார்.
ஆய்வு முடிந்த பிறகு அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருக்கும் கோவில்களுக்கு உடனடியாக கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுப்பதற்கு அரசிடம் வலியுறுத்துவேன். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 10ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது. இன்னும் 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது. இதுபற்றி தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்திக்கும் போது வலியுறுத்துவேன். பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கண்டிப்பாக தேவையான ஒன்று. இது தொடர்பாகவும் பேசி ராஜகோபுரம் கட்ட ஏற்பாடு செய்வேன்.
குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்துக்கு கீழ் உள்ள முக்கியமான கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களில் யானை பயன்படுத்தப் பட்டு வருகிறது. தற்போது தேவசம் போர்டு நிர்வாகத்துக்கு சொந்தமான யானை இல்லாததால் வாடகைக்கு யானை அமர்த்தி திருவிழா காலங்களில் பயன்படுத்தி வருகிறார்கள். இது குறித்து முதல்-அமைச்சர் மற்றும் அறநிலை யத்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்துக்கு சொந்தமாக யானை வாங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வெளிப்பிரகாரத்தை சுற்றி பக்தர்கள் அமர்ந்து இளைப்பாருவதற்கு வசதியாக திருச்செந்தூர் கோவிலில் இருப்பது போல சுற்றுப்பிரகார மண்டபம் கட்டுவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சேதம் அடைந்த தேர்கள் மற்றும் வாகனங்களை சீரமைப்ப தற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளத்தை சீரமைத்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்பி அடுத்த ஆண்டு தெப்பத் திருவிழா நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்